October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழில் வெளிவரவிருக்கும் ஜாக்கிசானின் ‘வான்கார்ட்’

புரூஸ்லீக்கு பிறகு உலகின் ரியல் சூப்பர் ஸ்டாராக படங்களில் அதிரடிக்காட்டும் ஜாக்கிசானின் ‘வான்கார்ட்’ திரைப்படம் இந்த மாதம் 25ஆம் திகதி இந்தியாவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழகத்தில் ரஜினி ,கமலுக்கு இருக்கும் புகழ், ஜாக்கிசானுக்கும் இருக்கிறது. இவருடைய படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை பெறும்.

அதற்கு காரணம் இவருடைய விளையாட்டுத்தனம் நிறைந்த, உயிரையே பணயம் வைத்து, இவர் செய்யும் உண்மையான சண்டைக் காட்சிகளும், சாகசங்களும் அதில் குழந்தைகளையும் கவர்ந்து விடும் அளவிற்கு இழையோடி இருக்கும் நகைச்சுவையும் தான்.

இந்தப் படத்தின் டிரெய்லரிலும் இவருடைய அசத்தலான சண்டைக்காட்சிகளும், நகைச்சுவையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மனிதர் இந்த வயதிலும் இவ்வாறு நடிப்பது அதிசயமே.

இந்தப் படத்தை பல வெற்றிப் படங்களை வெளியிட்டிருக்கும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தரான ஆர்.ரவீந்திரன் விரைவில் வெளியிடுகிறார்.

ஜாக்கி சானின் புதிய படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இந்திய மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு அதிரடியான படம் இது. ஜாக்கிசானின் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.