July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் பாடல் வெளியீடு

(Photo: Jayam Ravi/Twitter)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. அண்மைக் காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன.

அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் கோமாளி. காஜல் அகர்வால்  ஹீரோயினாக நடித்த இந்தப்படத்தில் யோகிபாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

சுமார் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியைப் பெற்ற கோமாளி திரைப்படம்  சிறுவர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் கூறவேண்டும்.

ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஓடி பிரபலமானது.

தற்போது ஜெயம்ரவி ‘பூமி’ ‘ஜனகனமன’ ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி நடிக்கும் 25ஆவது படம் தான் பூமி. நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தை “ரோமியோ ஜூலியட்” திரைப்படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

பூமி படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படத்தின் பாடல்களும் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தின் “வந்தே மாதரம்” என்ற பாடல் வரி வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

“வந்தே மாதரம்” என்ற இந்த பாடல் எழுச்சிமிகு பாடலாகவே அமைந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு போராளியின் உச்சகட்ட போராட்டமும் தமது வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் என இந்த பாடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பூமியில் தனது உரிமைக்காக போராடும் ஒரு போராளியின் வாழ்க்கையை இந்த வந்தே மாதரம் பாடல் காட்சிகளால் அசத்துகிறது.