June 11, 2025 15:57:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹாலிவுட் திரைப்படத்தில் மீண்டும் இணையும் தனுஷ்

உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை கட்டிப்போட்ட ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘த க்ரே மேன் ‘என்ற தலைப்பில் படத்தை எடுக்கவுள்ளனர். இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

மேலும் இந்தப் படத்தின் முக்கிய வேடத்தில் கிறிஸ் இவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

த்ரில்லர் கதைக்களமான ‘த க்ரே மேன்’ திரைப்படத்தை ஓடிடி தளமான நெட் பிளிக்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது.

வின்டர் சோல்ஜர், கேப்டன் அமெரிக்கா, சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய ஜோ ருசோ மற்றும் அண்டனி ஆகிய இயக்குநர்கள் தான் ‘த க்ரே மேன்’ திரைப்படத்தையும் உருவாக்குகின்றனர்.

தனுஷ் இதற்கு முன் ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்’ என்ற ஆங்கில படத்திலும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.