October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திரையரங்கில் வெளியாகும் ‘காட்டேரி’

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு காட்டேரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை தொடர்ந்து இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காட்டேரி.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா ,பொன்னம்பலம், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்.

ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறவேண்டும். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமானுஷ்யம் நிறைந்த , திகில் கதையாக இருக்கும் காட்டேரி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் பாேதே புரிகிறது.

இந்த படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

திகில்,பயம் என மிரட்டும் ட்ரெய்லரில் வரலட்சுமி சரத்குமாரின் குரலில் தாெடங்கும் நான் சொல்லப்பாேற கதையில உண்மையும் இருக்கும் பாெய்யும் இருக்கும் என்ற ஆரம்ப வசனங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக காட்டேரி திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தற்போது மூடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு இந்த திரைப்படம் திறப்பு விழா நடத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஒரு அழகான பொழுதுபோக்கு கதை அம்சத்தை கொண்டதாகவும் ,காமெடி ,திகில் என இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என நம்பலாம்.

ஆகவே கிறிஸ்மஸ் விருந்துக்கு சினிமா ரசிகர்கள் தயாராக இருக்கலாம்.