June 17, 2025 11:49:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெலுங்கில் பிசியாகிவிட்ட தமன்னா

தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,கன்னடம் என பல மொழிகளிலும் நடிப்பில் கலக்கி வருபவர் நடிகை தமன்னா.

தமிழில் கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி2 ,பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் ஆகிய படங்களில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இதனால் இந்த வருடம் தமிழ் சினிமாவில் தமன்னாவுக்கு படவாய்ப்புகள் தரப்படவில்லை என சொல்லப்படுகிறது. புதிய படங்களில் கூட அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து தெலுங்கு சினிமாப் பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார் தமன்னா, அங்கு தற்பாேது சில படங்களில் நடித்துவருகிறார்.

தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வரும் தமன்னா மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அடுத்த வருடம் தெலுங்கில் தமன்னா நடித்த நான்கு படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது .

குருதுண்ட சீதாகலம், சீட்டிமார்,அந்தாதுன் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் புதிதாக எப் 3 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை அணில் ரவிபுடி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். வருண் தேஜ், வெங்கடேஷ், தமன்னா, மெஹ்ரின் மற்றும் பலர் நடிக்கிறார்கள்