January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகுமாரின் மற்றுமொரு 80ஸ் திரைப்படம்

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சசிகுமார், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கிராமத்து மண் மணம் சார்ந்த கதைகளில் நடித்து B மற்றும் C சென்டர்களில், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

தற்சமயம் கொம்பு வச்ச சிங்கமடா, ராஜவம்சம், பரமகுரு,எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் அவர் கையிருப்பில் இருக்கின்றன.

பகைவனுக்கு அருள்வாய் என்று ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

திருமணம் என்ற நிக்கா படத்தை இயக்கிய அனீஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வாணி போஜன் இந்த படத்தில் ஒரு நாயகியாக நடிக்கிறார்.

பிந்து மாதவி இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

இந்த படம் எண்பதுகளில் நடப்பதைப் போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இரு வேறு காலகட்டத்தில் நடப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.