January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஷால், ஆர்யா நடிக்கும் ‘எனிமி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது.

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்,டீ ராமலிங்கம் கலை இயக்குனரின் கைவண்ணத்தில்,லிட்டில் இந்தியா செட் போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார்.

பிரகாஷ்ராஜ், டிக் டாக் புகழ் மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்தப்படத்தில் விஷால் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லோ லைட் எனப்படும் குறைந்தபட்ச ஒளியில் கிளாசிக் ஆகவும் அனைவரும் விரும்பும் படியும் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த படத்தில் தென்னிந்திய வில்லன் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.

ஆர் டி ராஜசேகர் கேமராவை கையாள தமன் இசை அமைக்கிறார்.

மினி ஸ்டுடியோஸ் வினோத் இந்த படத்தை தயாரிக்கிறார்.