இயேசுவின் 12 சீடர்கள் என்பது யாவரும் அறிந்த ஆன்மீகக் கதைதான். அவர் இறைவன், இறைத்தூதர், மகான், சித்தர் என பல்வேறு ரூபங்களில் மக்கள் மனதில் குடி கொண்டிருக்கிறார்.
இந்த யேசுவின் 12 சீடர்கள் திரைப்படம் 100 நாடுகளில் திரைப்படமாக்கப்பட உள்ளதாக அதன் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
யேசுவும் அவரது 12 சீடர்களைப் பற்றிய படத்தை பிரபல தொழிலதிபரும், மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான அல்டாப் அகமது தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் 12 சீடர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்களும் ,ஆச்சர்யங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் படமாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என கூறியுள்ள தயாரிப்பாளர், எல்லா மொழிகளிலும் வெளியாகும் இந்தப் படத்தில் இயேசுவின் 12 சீடர்கள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கிரிவலம் ,ரோஜா ஐபிஎஸ்,காதல் கிறுக்கன் ,உட்பட 10 க்கும் மேற்பட்ட படங்களை மீடியா டைம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மாபெரும் வெற்றி பெற்ற வந்தேமாதரம் என்ற வெற்றி படத்தை இயக்கிய நாகராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் இயேசுவின் 12 சீடர்கள் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அண்மைக்காலமாக மகான்களின், சித்தர்களின் வாழ்க்கை வரலாற்று கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வரும் நிலையில் இயேசுவின் 12 சீடர்களின் கதையும் தற்போது திரைப்படமாக்கப்பட இருப்பது சிறப்புக்குரியதே.