July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓடிடியில் வெளியாகும் மாதவனின் மாறா…

தற்போது திரையரங்குகளுக்கு பதிலாக ஓடிடி  தளங்களில் தான் அதிகமான  திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பால்  ஏற்பட்ட நிலையை சமாளிக்கும் விதமாக திரைத்துறையினரால்  இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் பாதியளவு திறந்தன.
இருந்தபோதிலும் போதுமான பார்வையாளர்கள் வராததால் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியிடப்பட்டால் மட்டுமே மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகள் முழுமையா திறக்கப்பட்ட பின்னரே முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியிடப்பட வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் ஓடிடி தளங்களில் தான் அதிகளவிலான திரைப்படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் விரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
 அந்த வகையில் மாதவன் நடித்த மாறா திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தை முன்னதாக திரையங்குளில் தான்  திரையிட  முடிவு செய்யப்பட்டிருந்தது.ஆனால் திரையரங்குகளில் தற்போது மக்கள் இல்லாத காரணத்தாலும், மூடப்பட்டு வருவதாலும் மீண்டும் ஓடிடி தளத்திற்கே  திரும்பியுள்ளது மாறா திரைப்படம்.
வரும் ஜனவரி 8ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான்  பிரைமில்  மாறா திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவன்,ஸ்ரத்தா ஸ்ரீநாத் , ஷிவாதா, மவுலி அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய சார்லி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மலையாள சினிமாவில் வெற்றிப்படமான சார்லி நல்ல வசூல் வேட்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாதவனின் மற்றுமொரு திரைப்படத்தை ரசிகர்கள் ஓடிடி தளத்தில் கண்டு களிக்கலாம்.