October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தளபதி ரஜினி லுக்கில் ஹரிஷ் கல்யாண்…

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ‘ஸ்டார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள் .

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தளபதி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் ‘ஸ்டார்’ பட  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணப்படுவதால் நல்ல வரேவற்பை பெற்றுள்ளது.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் ,மற்றும் சினிமா பிரபலங்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது சூப்பர் ஸ்டார் ஜினியுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு கதை அம்சமாக இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் ஸ்டார் படத்தையும் இயக்குகிறார். இந்த பியார்  பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண்,ரைசா வில்சன் ஆகியோர் நடித்திருந்தனர். கதை ,வசனம், பாடல் என அனைத்து தளங்களிலும் வெற்றிப்படமான இது விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றுக்  கொடுத்தது.

இதனால் இந்த கூட்டணியே  மீண்டும்  இந்த ஸ்டார்  படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர் .

ஸ்கிரீன் சீன்  நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி ரசிகர்களுக்க பிறந்த நாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.

அச்சு அசலாக ரஜினி போல் இருக்கும் ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் பட போஸ்டரை பலரும் பாராட்டியுள்ளனர்.