May 28, 2025 11:55:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கனவுப் படமான தலைவி படப்பிடிப்பு நிறைவடைந்தது’

‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரணாவத் டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்

வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஏ. எல் விஜய் இயக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் , ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும்,மேலும் பூர்ணா, மதுபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், கனவு திரைப்படமான தலைவி படத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய தலைவி படக் குழுவினருக்கு தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.