January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வசூலில் சாதனை படைத்த மூக்குத்தி அம்மன்

ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்தளவுக்கு வசூலை குவிக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முழு நீள காமெடி படமாகவும், சமூகப் பிரச்சினைகளை பேசும் படமாகவும் அமைந்திருந்த மூக்குத்தி அம்மன் வெளியாகி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்த மூக்குத்தி அம்மன் ,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் கட்டிப்போட்டது

ஆர். ஜே. பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் முதன்முறையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்திருந்த மூக்குத்தி அம்மன்,தீபாவளி விருந்தாக நவம்பர் 14 ஆம் திகதி ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் வசூல் எவ்வாறு வரும் என்ற ஒரு பயம் ஏற்பட்டது.

ஹொட்ஸ்டாரில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் இதுவரை 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

13 கோடி ரூபாய் பட்ஜெடில் உருவாக்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே இனிவரும் காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களும், சிறிய பட்ஜெட் படங்களும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.