January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரசாந்துடன் மீண்டும் ஜோடி சேரும் சிம்ரன்

தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டவர்கள் தான் நடிகை சிம்ரனும், நடிகர் பிரஷாந்தும். இவர்கள் இணைந்து நடித்த படமெல்லாம் வெற்றிப்படமாகவே நல்ல வசூலை அள்ளிக் குவித்தது.

ஜோடி,கண்ணெதிரே தோன்றினாள்,பார்த்தேன் ரசித்தேன்,தமிழ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா ,தபு ,ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஹிந்தி படம் அந்தாதுன்.

இந்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமத்தை கடும் போட்டிக்கு இடையே பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் கைப்பற்றியிருக்கிறார்.

இந்த படம் ஹிந்தியில் வெளியானது முதல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றி பெற்றது. அந்தாதுன் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.

தற்போது பொன்மகள் வந்தாள் என்ற வெற்றிப் படத்தை இயக்கி அனைவரது பாராட்டையும் பெற்ற இயக்குனர் ஜே.ஜே பிரட்ரிக் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்.

ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த பிரசாந்த் அந்தாதுன் தமிழ் ரீமேக் மூலமாக மீண்டும் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.

இதற்காக நடிகர் பிரஷாந்த் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தனது உடலை குறைத்து மெலிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அந்தாதுன் தமிழ் படத்திற்கான முதல் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்தாதுன் ஹிந்தி படத்தில் பிரபலமாக பேசப்பட்ட கதாபாத்திரம் தான் தபுவின் கதாபாத்திரமாகும். படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் வில்லியாக தபு நடித்து அசத்தியிருப்பார். அதற்காகவே தமிழ் ரீமேக்கில் அந்த கதாபாத்திரத்திற்கு நடிப்பு ,நடனம் ,நளினம் என சகல திறமைகளையும் கொண்ட சிம்ரன் நடிக்க தேர்வாகியுள்ளார்.

கண்டிப்பாக சிம்ரனின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த அந்தாதுன் ரீமேக்கில் நடிக்க உள்ளது பற்றி பேசியுள்ள சிம்ரன் , தபுவின் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது மிகப்பெரிய சவாலானது என்று கூறியுள்ளார். ஒரு பொறுப்பான , துணிச்சலான கதாபாத்திரம் தன்னுடையது என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் சிம்ரன் நெகிழ்ந்துள்ளார்.

இந்த கதாபாத்திரம் தனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு சிம்ரன் கூறியிருக்கிறார் .

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பிரசாந்த், சிம்ரன் ஜோடிகள்  மீண்டும் தமிழ் திரைப்படத்தின் மூலமாக இணைவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.