January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

த்ரிஷாவின் ‘ராங்கி’ படப் பாடல் வெளியீடு

தமிழ் திரை உலகில் சுமார் 18 வருடங்களாக ஒரு முன்னணி நடிகையாக இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

அந்த இடத்திற்கு வருவதற்கு சில நடிகைகளால் மட்டுமே முடியும். படங்களில் நடிக்க வந்தது முதல் இன்று வரை முன்னணியில் கலக்கும் நடிகை த்ரிஷா. இன்று வரை நடிகை த்ரிஷாவின் இடத்தை பிடிக்க எந்த நடிகையாலும் முடியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

தமிழில் இறுதியாக 96 என்ற படத்திற்கு பிறகு த்ரிஷா பெயர் கூறும் அளவிற்கு எந்த படங்களில் நடிக்கவில்லை என்றாலும் , தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.ஆனால் இதுவரை எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ என்ற படத்தில் இருந்து பனித்துளி என்ற பாடல் வெளியிடப்பட இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

இதற்கான அறிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டிருக்கிறது.

ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள். இந்த படத்தில் பனித்துளி என்ற பாடலை சின்மயி பாடியிருக்கிறார்.

நீண்ட இடைவெளியின் பின்னர் த்ரிஷாவை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். எங்கேயும் எப்போதும் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய சரவணன் இந்த ராங்கி படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்தப் படம் த்ரிஷாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கையில் துப்பாக்கியுடன் வெளியான ராங்கிப் பட போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

த்ரிஷா தற்போது ஏழு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பரமபதம் விளையாட்டு,கர்ஜனை,சதுரங்கவேட்டை2, சுகர், ராம், பொன்னியின் செல்வன் Cinima

ஆகிய படங்கள் த்ரிஷா கைவசம் இருக்கின்றன.

சரவணன் இயக்கத்தில் ஏ .ஆர் முருகதாஸ் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா உடன் அனஸ்வரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.