January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்வரன் படத்தின் பாடல் பற்றி சிம்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஈஸ்வரன் திரைப்படம் குறித்து அந்த படத்தின் கதாநாயகன் சிம்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்த படத்தைதான் சிம்பு 40 நாட்களில் ,வெகு சீக்கிரத்தில் நடித்து முடித்துக் கொடுத்ததாக பாராட்டுகளையும் பெற்றார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இந்த படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல விமர்சனங்களுக்கும் உள்ளாகியது.

இந்தப் பட போஸ்டரில்தான் சிம்பு பாம்பைப் பிடித்து கழுத்தில் வைத்திருந்த காட்சி வைரலானது. அது நீதிமன்றம் வரை சென்றது.

தற்போது அடுத்ததாக ஈஸ்வரன் படத்தின் சிங்கிள் பாடல் டிசம்பர் 14 ஆம் திகதி வெளியிடப்பட உள்ள மாஸ் அறிவிப்பை சிம்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வந்து சில நிமிடங்களில் ஆரவாரத்தின் உற்சத்திற்கு சென்ற சிம்பு ரசிகர்கள் இதனை சமுகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் சிம்பு படப் பாடல் வெளியாக இருக்கிறது. சிம்பு நடித்த படப் பாடல் என்றாலே அது எப்போதுமே மாஸ் தான். அந்த வகையில் இந்த பாடலும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என நம்பலாம்.