June 16, 2025 12:40:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தளபதி 65’ சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..

தற்பொழுது நடிகர் விஜயின் 65 ஆவது படம் பற்றிய உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதியின் 65 ஆவது படமானது ‘சன் பிக்சர்ஸ் ‘ கலாநிதி மாறன் புரொடக்‌ஷனில் அமையப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜயின் 65 வது படத்தின் எழுத்து இயக்கம் நெல்சன் திலீப் குமார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்.

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ரொக்ஸ்டார் அனிருத் என்றும் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

https://twitter.com/sunpictures/status/1336996618105626628?s=20