January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமந்தா தமன்னா முதல் முறையாக இணைந்த நிகழ்ச்சி

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் நடிகை சமந்தாவும் ,தமன்னாவும்.

இவர்கள் இருவரும் ஒரு படத்தில் கூட இன்னும் இணைந்து நடிக்கவில்லை என்பது ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

சமந்தா நடித்த ஒரு தெலுங்கு படம் ஒன்றில் தான் தமன்னா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தாவும், தமன்னாவும் ஒரு தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக தெலுங்கு மொழியில் “சாம்ஜாம்” என்ற தொலைக்காட்சித் தொடரை நடத்தி வருகிறார் .
இந்த தொடரில் நடிகர் சிரஞ்சீவி, விஜய்தேவரகொண்டா , ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

“சாம்ஜாம்” நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் நடிகை தமன்னா கலந்து கொண்டுள்ளார்.

சமந்தா மற்றும் தமன்னாவின் இந்த நிகழ்ச்சி வரும் 11ஆம் தேதி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது .

இந்த நிகழ்ச்சிக்காக சமந்தா மற்றும் தமன்னா இருவரும் உரையாடும் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. தமன்னா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்பாேது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.