June 15, 2025 15:25:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஒரு வழியாக பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

பல வெற்றிப்படங்களுக்கு சொந்தக்காரரான இவர் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

ரோஜாக் கூட்டம், மனசெல்லாம்,வர்ணஜாலம், ஏப்ரல் மாத்தில், பூ ,பார்த்திபன் கனவு,கனாக் கண்டேன் ,பம்பரக்கண்ணாலே,போஸ்,ஒரு நாள் ஒரு கனவு,கிழக்கு கடற்கரைச் சாலை , நண்பன் பாேன்ற பல வெற்றிப்படங்களைக் கொடுத்து இன்றளவும் எல்லோர் மனதிலும் நிலைத்து நின்றுவிட்டார்.

காலப்போக்கில் அவருக்குரிய கதைகள் கிடைக்காததால் கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது .

இவர் இறுதியாக 2012 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இணைந்து நடித்திருந்தார் .இந்த படம்தான் இறுதியாக ஸ்ரீகாந்த் நடித்த படம். அதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு நல்ல வெற்றியை தேடி கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எட்டு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அவர் தமிழில் நடிக்க வந்திருக்கிறார். விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதென்றால் அது இலகுவான விடயமல்ல ,மீண்டும் தமிழ் சினிமாவில் தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்ரீகாந்த்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் த்ரில்லர் கதை அம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஸ்ரீகாந்த் அடுத்ததாக “எக்காே” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த தகவல் ஸ்ரீகாந்த் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என நம்பலாம்.

இந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக வித்யா பிரதீப் என்ற நாயகி நடிக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் எக்கோ படத்தை புதுமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்க உள்ளார் .

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.