January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’  தொலைக்காட்சி தொடரில் நடித்துவந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர் ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

சித்ராவுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதுடன், அடுத்த சில மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் சென்னையை அடுத்த நசரத் பேட்டையிலுள்ள தனியார் விடுதியில் இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய சித்ரா, தனது வருங்கால கணவருடன் குறித்த விடுதியில் தங்கியிருந்த போது  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சின்னத்திரை ரசிகர்களுக்கிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.