
தமிழ் திரையுலகில் நடிகை விஜயசாந்திக்கு அடுத்ததாக ஆக்ஷன் படங்களில் தாராளமாக நடித்து வருகிறார் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.
இந்நிலையில் தமிழில் அடுத்த விஜயசாந்தியாகப் பார்க்கப்படும் நடிகை வரலட்சுமி நடித்த ‘சேஸிங்’ என்ற படம் 3 மொழிகளிலும் வெளியாக இருக்கிறது .
தொடர்ந்து நடிகை வரலட்சுமி தான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டி வருகிறார்.
தற்போது அதிக படங்களில் நடித்த நடிகை யார் என்று பார்க்கும்போது, அது நடிகை வரலட்சுமி தான் என எண்ணத் தோன்றுகிறது. தற்போது கைவசம் 9 படங்களை அவர் வைத்துள்ளார் என்றால் பெருமைதான்.
தமிழில் காட்டேரி ,பாம்பன் ,பிறந்தாள் பராசக்தி ,கலர்ஸ்,யானை ,சேஸிங், தெலுங்கில் நந்தி, கிராக் ,கன்னடத்தில் ரணம் என ஒன்பது படங்கள் கையில் இருக்கிறது.
அடுத்ததாக தற்போது நடித்த கையோடு’சேஸிங்’ படம் வெளிவர இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது .
இதில் வரலட்சுமி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்கியுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படமான இதில் வரலட்சுமியின் அதிரடி சண்டைக்காட்சிகள் மிகவும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிகை வரலட்சுமி நடித்திருப்பதாகவும் படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். ‘சேஸிங்’ படத்தில் மூன்று வில்லன்களுடன் போராடுகிறார் வரலட்சுமி. இந்தப் படத்துக்கு தணிக்கை குழு யு,ஏ சான்றிதழ் அளித்துள்ளது .
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமியை நாம் மாறுபட்ட வேடத்தில் பார்க்கலாம்.