எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின்னர் விஜய் சேதுபதி லாபம் என்ற படத்தில் நடிக்கிறார்.
கிராமப்புற விவசாயத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் .
தற்போது கொராேனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதி லாபம் படத்தில் தனது காட்சிகளை எல்லாம் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தை OTT யில் வெளியி்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் . இன்னும் சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பின்னர் மொத்த படமும் முடியும் என சொல்லப்படுகிறது .
இந்நிலையில் பிரபல நடிகர்களின் படங்கள் OTT தளங்களில் வெளியாகி நல்ல வசூலை குவித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி நடித்த லாபம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது OTT யில் லாபத்தை பெற்றுக்கொடுக்குமா என்பதை பாெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.