January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் இஷா கோபிகர்

99 காலப்பகுதியில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்தியவர் இஷா கோபிகர்.

1999 ல் வெளிவந்த என் சுவாசக்காற்றே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இஷா கோபிகர். இந்த திரைப்படம் பல நாட்கள் ஓடி வெற்றித் திரையை தட்டியது.

அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நெஞ்சினிலே படத்தில் நடித்து அசத்தினார். இதன் பின்னர் நடிகர் விஜயகாந்த் ஜோடியாக நரசிம்மா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இவர்.அந்தக் காலத்திலேயே பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.

2001ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 19 வருடங்கள் கழித்து சிவகார்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார் இஷா கோபிகர்.

சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத்தி சிங் ,மற்றும் பலர் நடிக்கும் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத்தி சிங், யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தற்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முன்னாள் கதாநாயகியான இஷா கோபிகர் சென்னை வந்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத் கேல்கரும் இணைந்திருக்கிறார்.

இதற்காக நேற்று சென்னை வந்த இவர்கள் தங்களது பயணம் குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

பின்னர் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு படம் பற்றிய ஒரு அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார் இஷா கோபிகர் . அயலான் படம் 2021 ஆம் ஆண்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.