January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெத்தா, ஸ்டைலா மாஸ் காட்டும் சிம்பு

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா லொக்டவுனுக்கு பிறகு சினிமாவில் விறுவிறுப்பாக தனது பட ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்த நடிகர் என்ற பெருமையை சிம்பு பெற்றுள்ளார்.

இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு, அடுத்த படத்திற்காக தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது கோட் சூட்டில், சிம்பு டுவிட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கடந்த 9 ஆம் திகதி பாண்டிச்சேரியில் மாநாடு ஷூட்டிங் தொடங்கியது முதல், வித்தியாசமான கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்களை வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் சிம்பு .

தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய மூன்று புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது எந்த படத்திற்கானது என்று தெரியவில்லை. இருந்தாலும் புது விதமான கெட்டப்பில் சிம்பு காட்சியளிக்கிறார்.

வித்தியாசமான காேட் டிசைன் ,தலை முடி லுக் என சிம்புவின் புகைப்படம் பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

சிம்பு சமூக வலைத்தளங்களுக்கு எப்போது வந்தாரோ அன்றிலிருந்தே சிம்புவின் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களையும், சினிமா துறையினரையும் உற்று நோக்க வைக்கிறது.