January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரபாஸின் அடுத்தடுத்து நான்கு படங்கள்

பாகுபலி பாகம் 1 ,பாகம் 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை .

இந்நிலையில் அப்படத்திற்கு பிறகு தற்போது கே. கே. ராதா கிருஷ்ணா இயக்கும் ராதேஷ்யாம் என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறோர் . இது பெரிய பட்ஜெட் படமாகும்.

இதைத் தொடர்ந்து மகாநடி என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் பிரபாஸின் 26வது படத்தை இயக்கவுள்ளார். இதில் பிரபாஸ் ஜோடியாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸின் 22வது படமான ஆதிபுருஷ் ராமாயண கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது. இதனை தெலுங்கு இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார்.

தொடர்ந்து இது போன்ற சரித்திரப் படங்களில் நடிக்க இயக்குனர்கள் பிரபாசை நாடுவது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பிரபாஸின் 23வது படத்தை கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.சலார் என்னும் பெயருடன் சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் 1000 கோடியைத் தாண்டுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இந்திய திரையுலகில் ஒரே சமயத்தில் ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாரும் இல்லை என கூறப்படுகிறது.

பிரபாஸ் பாகுபலி படம் மூலம் தன்னை முன்னணி நாயகனாக நிலை நிறுத்தினார்.

இந்நிலையில் தன் கைவசமுள்ள நான்கு படங்களுக்கும் ஆயிரம் கோடி பட்ஜெட்டை தாண்டிய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்