
வெற்றிமாறன்,இயக்கத்தில் உருவான பொல்லாதவன், ,ஆடுகளம் ,விசாரணை ,வடசென்னை,அசுரன் போன்ற வெற்றிப் படங்கள் முலம் தமிழ் சினிமாவில் தனக்ககான முத்திரையை பதித்தார்.
தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள வாடிவாசல் படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் வெற்றிமாறன். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் வாடிவாசல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ,விரைவில் காமெடி நடிகர் சூரியை கதை நாயகனாக வைத்து படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பணிகள் தற்பாேது நடைபெற்று வருகிறது, இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக தெரிகிறது.
இதற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காமெடி நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் என்றால்,அது காமெடி கலந்த ஒரு கதைக்களமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.
இசைஞானி இளையராஜா இசையில் சூரியை நாயகனான வைத்து உருவாகும் இந்தப் படம் மாறுபட்ட வடிவத்தில் அமையலாம் என்ற எதிர்பா்ப்பு அதிகரித்துள்ளது.