தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் நடித்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத்.
அவரின் நினைவு நாளை ஒட்டி ஜெயலலிதாவைப் போன்று வேடம் தரித்து அவரின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளார் கங்கனா ரணாவத்.
“உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவுநாளில், மலர் அஞ்சலி செலுத்துவதில் பெருமைப்படுகிறேன்”,”பெண்மையை போற்றுவோம்” என தமிழில் ட்விட் செய்திருக்கிறார் கங்கனா ரணாவத்.
உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன்.
பெண்மையைப் போற்றுவோம். pic.twitter.com/odTEUTjN9F
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) December 5, 2020
இயக்குனர் ஏ.எல் விஜயின் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் கெளதம் மேனன் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து குயின் என்ற வெப் சீரிசை இயக்கினார்.அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேபோல் இந்த வரலாற்று படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் தலைவி திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்படைந்துள்ளன.