
காதலும் நகைச்சுவையும் கலந்த படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு ,மலையாளம் கன்னடம் ,ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நகைச்சுவை கலந்த படங்களுக்கு குறைவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை தன்வசப்படுத்தி விடுகிறது இவ்வாறான படங்கள். இதுபோன்ற தரவரிசையில் புதுசாக இடம்பெற்றிருக்கும் ஒரு திரைப்படம் தான் ஓ மணப்பெண்ணே .
இது ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய பெல்லி சூப்பலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இதில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் ,ப்ரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள் .
மேலும் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் ஓமணப்பெண்ணே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால் இந்த படமும் வெற்றிப் படமாக இருக்கும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் சுந்தர் தெரிவித்துள்ளார் . இந்த படத்துக்கு பின் ஹரிஷ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்து மேலும் பல படிகள் உயரும் என தயாரிப்பாளர்கள் கொனேரு சத்தியநாராயணா, ரமேஷ் வர்மா இருவரும் கூறியிருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் பக்கத்து வீட்டு பையன் போல இருப்பார் எனவும் சமையல் கலையில் ஆர்வமுள்ளவர் எனவும் கூறப்படுகிறது.
அம்மா அப்பாவின் கட்டாயத்தால் இன்ஜினியரிங் படிப்பதாகவும் ,கதாநாயகி ப்ரியா பவானி சங்கர் எம்.பி.ஏ பட்டதாரியாகவும் துணிச்சல் மிகுந்த பெண் எனவும் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
படம் முழுவதும் சென்னையிலேயே படமாக்கப்பட்டுள்ளதாகவும் 30 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டதாகவும் இதன் இயக்குனர் கூறியிருக்கிறார்.தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.