சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்றவுடன் அதில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடிப்பார் என எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அதுதான் இல்லை.
அவருக்கு பதிலாக ரஜினியின் நம்பிக்கைக்குரிய நடிகர் ராகவா லோரன்ஸ் சந்திரமுகி பாகம் இரண்டில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது .
நடிகர் ராகவா லோரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் டைட்டிலை வாங்க ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல்கள் கசிந்தது.
ஆனால் பி.வாசு இயக்க ராகவா லோரன்ஸ் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை .
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலான சந்திரமுகி, சிவாஜி பிலிம்ஸ் வசம் இருந்த நிலையில் அதை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம் .
சந்திரமுகி பாகம் இரண்டு மிக பிரமாண்டமாக 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
சந்திரமுகி முதல் பாகம் வெளியானபோது அது பட்டி தொட்டி எல்லாம் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது . அதற்கு இன்றும் மவுசு குறையவில்லை என்றே கூற முடியும். அந்த அளவிற்கு கதை ,வசனம்,காட்சி, வடிவேலுவின் காமெடி ,நடிகர்கள் தெரிவு என பிரம்மாண்டமாய் இருந்தது.
ஆகவே நடிகர் ரஜினிகாந்த் இல்லாத சந்திரமுகி பாகம் இரண்டு எவ்வாறு வெற்றியை தன் வசமாக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.