பெண்களின் யதார்த்த வாழ்வியலை பேசும் ‘பாவக் கதைகள்’ ட்ரைலர் வெளியாகியுள்ளது.
பிரகாஷ்ராஜ் ,சாய்பல்லவி ,அஞ்சலி ,சிம்ரன் ,கௌதம் மேனன், சாந்தனு பாக்கியராஜ் ,பவானி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நான்கு கதைகளை உள்ளடக்கிய இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் விஷுவல் டரீட் என்பது புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாவக் கதைகள் படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ட்ரைலரை பார்க்கும் போது இது முழுக்க முழுக்க பெண்களின் வாழ்வியலைப் பேசும் சினிமாவாக இருக்கலாம் என தோன்றுகிறது.
பெண்கள் மீதான ஒடுக்குமுறையை அடித்து நொறுக்கும் படியான வசனங்கள், இந்த ட்ரெய்லர் காட்சிகளில் தனித்துவமாக இருக்கிறது.
முன்னணி இயக்குனர்கள் 4 பேர் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படம் கதை,காட்சி ,உணர்வு என பிரமாண்டமாய் அமைந்திருப்பதை ட்ரெயிலர் உணர்த்துகிறது.
பெண் பிள்ளைகளின் கனவு,காதல் திருமணம் செய்து கொண்ட மகள் , தன்பால் ஈர்ப்பு, இஸ்லாமியப் பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதும் சாந்தனு என எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது பாவக் கதைகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக “ஒரு குடும்பத்தோட மானம், கௌரவம், ஆணவம் இத வீட்ல இருக்கிற பொம்பளைங்க தான் சுமக்கிறாங்க” , “இறக்கி வைக்கவே கூடாது வாழ்க்கை பூரா “என சிம்ரன் வசனம் பேசிய கையோடு தன்னுடன் இருக்கும் சிறுமியை கீழே தள்ளி விடும் காட்சி மனதை உருக்குகிறது.
Honour. Love. Sin. Pride.
4 stories, 1 rollercoaster of emotions. #PaavaKadhaigal @menongautham @SimranbaggaOffc @AadhityaBaaskar #SudhaKongara @BhavaniSre @kalidas700 @imKBRshanthnu @VetriMaaran @Sai_Pallavi92 @prakashraaj @VigneshShivn @yoursanjali @kalkikanmani pic.twitter.com/bWTgCOfq1M— Netflix India (@NetflixIndia) December 3, 2020
காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்ற தன் மகளை காண வரும் பிரகாஷ்ராஜ் காட்சியும், அவர் பேசும் வசனமும் அருமையாக அமைந்திருக்கிறது.
அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு துணிவு மிகவும் தேவை. தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து பேசும் என்றே தோன்றுகிறது.
இவ்வாறான விடயங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் இப்படி ஒரு துணிச்சலான கதை என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். கூடவே சமுதாயத்தில் புதிய விவாதங்களையும் உருவாக்கும்.
கல்பனா சாவ்லா குறித்து பேசும் பெண் பிள்ளையின் காட்சியும், தன் மகளை கையில் ஏந்தி கௌதம் மேனன் சுற்றும் காட்சியும் அழகு.
குறிப்பாக இந்தப் பாவக் கதைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் பல கதைகளின் பின்னணியை ஒட்டுமொத்தமாக சுருக்கி பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து விட்டது என்றே கூறமுடியும் .
சுதா கொங்கரா ,வெற்றிமாறன் ,விக்னேஸ் சிவன் ,கவுதம் மேனன் ஆகிய நான்கு இயக்குனர்களும் இணைந்து உருவாக்கியுள்ள பாவக் கதைகள் என்ற ஆந்தாலஜி சினிமா, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இம்மாதம் 18ஆம் திகதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பழைய சினிமா விதிகளை உடைத்தெறிந்து புதிய விதிகளை உருவாக்கியுள்ளது என்றே தோன்றுகிறது .
இந்த பாவக் கதைகள் புதுமையும் ,அதிர்ச்சியும் ,வாழ்வில் நடக்கும் யதார்த்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக அமைந்திருப்பது வரவேற்புக்குரியதே.
ஆகவே ஒவ்வொரு குடும்பங்களின் பின்னணியில் இருக்கும் பெண்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது பாவக் கதைகள்.