photo/AR Rahman/facebook
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு சர்வதேச அளவில் பல சிறப்பு அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன.அந்த வகையில் தற்போது உலகளாவிய அளவில் சிறப்புத் தூதராக அவர் நியமிக்ககப்பட்டுள்ளார்.
‘பாப்டா’ என அழைக்கப்படும் பிரிட்டிஷ் அகடமி
இந்த ‘பாப்டா’ எனப்படும் பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸின் தூதராக ஏ ஆர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பு இந்தியாவில் திறமையாளர்களை தேர்வு செய்வது என்ற பெயரில் ஒரு புதிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
பாப்டா ப்ரேக்த்ரு இனிஷியேட்டிவ் என இது பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து திரைப்படம் ,விளையாட்டு, தொலைக்காட்சி உள்ளிட்ட துறைகளில் இருக்கும் திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை உலக அரங்கில் கெளரவிக்க உள்ளது.
இப்படி தேர்ந்தெடுக்கப்படும் திறமையாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தேவையான ஆலோசனைகள்,சர்வதேச அளவிலான அங்கீகாரம்,பாப்டா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு,திரையிடல்களுக்கு இலவச அனுமதி போன்ற பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க இருக்கிறது.
இந்த புதிய முயற்சிக்கு இந்தியாவின் சார்பாக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
இது குறித்து பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்,உலகப் புகழ் பெற்ற ஒரு அமைப்பு தரும் தனித்துவமான வாய்ப்பு, உலக அரங்கில் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் என கூறியுள்ள அவர்,உலக அரங்கில் இந்திய கலைஞர்களின் திறமைகளை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Exciting and inspiring with more responsibilities 😊 https://t.co/P7PZiUZu4p
— A.R.Rahman (@arrahman) November 30, 2020