விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருக்கிறார்.
சமீபத்தில் கட்சி தொடங்குவதில் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையில் மாேதல் போக்கு நிலவியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றி புதிய நிர்வாகிகளையும் நியமித்ததாக தகவல் வெளியாகியது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக VMI என்ற பெயரில் யூடியூப் சேனல் தாெடங்கவுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஞாயிறு காலையில் இந்தியா முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு யூடியூப் சேனலை தொடங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த யூடியூப் சேனல் வாயிலாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை வெளிக்கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
திடீரென விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூடியூப் சேனல் தொடங்குவதற்கான முக்கிய காரணம் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், இது எதற்கான ஆரம்பப்புள்ளி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .