சிறந்த நடிகையாக மட்டுமல்ல, ஒரு சிறந்த இயக்குனராகவும்,சிறந்த தொகுப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் .
தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்சனைகளை விவாதித்துத் தீர்ப்பு கூறும் இவர், சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
ஆனாலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் இவர், திரைப்படத் துறையை விட்டதாகவும் தெரியவில்லை .
சிறிய இடைவெளியின் பின்னர் மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ,அம்மணி மற்றும் ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இவர் இயக்கியுள்ள இவர் தற்போது ‘ப்ளூ இன்க்’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கவுள்ளார்.
இந்த படமானது சமீபத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவியே எடுக்கப்படுவதாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார் .
இந்த படத்தின் துணைத் தலைப்பாக “இந்த நீலம் சிவப்பு “என வர்ணங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படம் தொடர்பாக அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Here is the title for my next film… pic.twitter.com/Xae86AZ2Rb
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 27, 2020
அம்மணி படத்தில் முதியவர்களின் பிரச்சினைகளையும் ,ஆரோகணம் படத்தில் ஒரு தாயின் மன அழுத்தத்தையும் ,ஹவுஸ் ஓனர் படத்தில் சென்னை வெள்ளத்தையும், நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் ஒரு துரத்தல் காதலையும் அவர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு சார்பாக பேசி வரும் இவர், தற்போது இயக்கும் ‘ப்ளூ இன்க்’ படத்தில் ஒரு இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி பேச இருக்கிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்புப் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது .