என்னதான் விமர்சனங்கள் வந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
தன்னை விட பத்து வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக நடிகை ஸ்ருதிஹாசன் மீது விமர்சனம் எழுந்துள்ளது .
சர்ச்சைக்குரிய வகையில் நடிப்பெதெல்லாம் ஒன்றும் ஸ்ருதி ஹாசனுக்கு புதிதல்ல. இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை.
ஏ .ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன்,தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்த நிலையில், சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார் .
அது மட்டுமல்லாமல் தற்போது வெப் சீரிஸ் பக்கம் கூட தனது கவனத்தை திருப்பியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
அவரது நடிப்பில் புதிய வெப் சீரிஸ் ஒன்றும் உருவாகியுள்ளதாம்.
இந்த புதிய வெப் சீரிஸில் தன்னை விட பத்து வயது குறைந்த இளம் அறிமுக நடிகருடன் சர்ச்சைக்குரிய படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார் என சமூக வலைதளங்களில் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன .