January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னணி இயக்குனர்களின் “பாவக் கதைகள்”

கொரோனா தாக்கத்தை அடுத்து சினிமாத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அப்போது திரைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான சாத்தியகூறுகள் இல்லாததால் வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் களமிறங்கினர்.

அந்த முயற்சி நல்ல வெற்றியைக் கொடுக்கவே எல்லோரும் குறுகிய காலத்தில் உழைப்பதற்கான வழியாக வெப் சீரிசை பயன்படுத்தி அதனை பிரபலப்படுத்தினர்.

அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பேர் இணைந்து ஒரு அந்தாலஜி வெப் சீரிசை இயக்கியுள்ளனர்

கௌதம் மேனன், வெற்றிமாறன் ,விக்னேஷ் சிவன் ,சுதா கொங்கரா இயக்கத்தில் பாவக் கதைகள் என்ற ஒரு வெப் சீரிஸ் உருவாகியுள்ளது .
இதில் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். இது பெரிதும் பேசப்படக் கூடிய படமாக இருக்கும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

சாய்பல்லவி ,சிம்ரன் ,அஞ்சலி ,காளிதாஸ் ஜெயராம், கௌதம் மேனன், சாந்தனு , உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் . ஆகவே இந்த வெப்சீரிஸ் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறவேண்டும் .

நான்கு முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள பாவக் கதைகள் சீரிஸின் டீஸர் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நான்கு கதைகளை உள்ளடக்கிய இந்த சீரிஸ் ,வாழ்க்கையில் குடும்பம்,காதல், உணர்வுகள், இவற்றுக்கிடையே உள்ள தொடர்பை ஆழமாக படம் பிடித்து காட்டியுள்ள ஒரு அழகான குட்டிப்படம் என கூறப்படுகிறது.

பாவக் கதைகள் டிசம்பர் 18 ஆம் திகதி நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ள நிலையில், தற்போது ரசிகர்களின் ஆவலை பெரிதும் தூண்டியுள்ளது.

முன்னணி இயக்குனர்களும் ,முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ள இந்த வெப் சீரிஸ் எவ்வாறான கதை அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்