July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்‌ஷன்படமான அயலான் திரைப்படத்தை இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கிவருகிறார்.

24AM ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . மேலும் இஷா கோபிகர் , யோகி பாபு,கருணாகரன் ,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர் .

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் . ஆகவே அயலான் படப் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

சில பிரச்சனைகளால் தள்ளிப் போன இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயன் யோகிபாபு இருப்பது போல ஒரு புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள் .

வித்தியாசமான கதைக்களத்துடன் வரும் அயலானை விரைவில் பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் .