October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக் பாஸ் வீட்டுக்குள் வெள்ளம்; இந்த வாரம் படப்பிடிப்பு நடக்குமா?

தமிழ்நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ள நிவர் புயலால் சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள பிக் பாஸ் வீட்டிலும் வெள்ளம் எட்டிப்பார்த்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் கார்டன் ஏரியாவுக்குள் வெள்ளம் வந்துவிட்டதால் அங்கிருந்து போட்டியாளர்களை ஹோட்டலுக்கு மாற்றி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. ஆனால் இந்தத் தகவலை பிக் பாஸ் நிர்வாகத்தினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

குறிப்பாக சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி இருக்கும் பகுதியை அண்மித்துத்தான் பிக் பாஸ் வீடு செட் போடப்பட்டிருக்கும் ஈவிபி பிலிம் சிட்டி அமைந்திருக்கிறது.

புயலால் பிக்பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் போட்டியாளர்களை தங்க வைப்பது சிரமம் ஆகிவிடும் என்று அவர்களை பாதுகாப்பாக அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளதாகவே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், வார இறுதியில் நடக்கும் கமல் ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இம்முறை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஓரிரு நாட்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பழைய சீன்களை வைத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று தான் பரவலாக பேசப்படுகின்றது.