November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து ஒஸ்காருக்கு தெரிவான ஜல்லிக்கட்டு

2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலையாள மொழியில் வெளிவந்த ஜல்லிக்கட்டு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் ,செம்பன், வினோத், ஜோஸ் உள்ளிட்டோர் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படம் பெரியளவில் விமர்சனங்களுக்கு உள்ளானது.
எழுத்தாளர் ஹரிஷ் எழுதியிருந்த மாவோயிஸ்ட் என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது .இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுக்கு ஜல்லிக்கட்டு படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அயல்நாட்டு திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட இந்திய திரைப்பட கூட்டமைப்பு இந்த ஜல்லிக்கட்டு படத்தை தேர்வு செய்திருக்கிறது .

ஜல்லிக்கட்டுப் படம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என தேர்வு குழுவின் தலைவரான ராகுல் ராவைல் விளக்கமளித்துள்ளார்.

மனிதர்களுக்குள் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை இந்தப்படம் பேசுவதாக கூறியுள்ள அவர், மனிதர்களின் உணர்வுகள் விலங்குத் தன்மையை விட மோசமானதாக இருக்கிறது என்பதை ஜல்லிக்கட்டு அற்புதமாக சித்தரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

லிஜோ ஜோஸ் மிகத் திறமையான இயக்குனர் எனவும் இந்தப் படத்தில் காட்டப்பட்ட உணர்ச்சி மிகுந்த காட்சிகள் தங்களை உலுக்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனால் தான் இந்தியா சார்பாக இந்த ஜல்லிக்கட்டு படத்தை ஒஸ்கார் விருதுக்கு தேர்வு செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

முழுவதுமாக 27 படங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் சர்வதேச சிறந்த திரைப்பட பிரிவில் 93வது ஒஸ்கார் அகாடமி விருதுக்கான போட்டியில் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.