
பிரசாந்த் நீல் இயக்கி 2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த கேஜிஎஃப் படத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி என பல மொழிகளில் திரையிடப்பட்ட கேஜிஎஃப் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது .
இந்தப் படத்தின் ரிலீசை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இதற்கு காரணம் கேஜிஎஃப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் ஆதிரா என்ற முக்கிய வில்லன் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார் .
ரவீனா டாண்டன் ,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தற்போது கேஜிஎஃப் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் லாக் டவுனுக்கு பிறகு ஆகஸ்ட் 26 ஆம் திகதி தொடங்கியது. இது குறித்து படக்குழுவினர் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர் .
இந்த பட ஷூட்டிங்கில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்திருக்கிறார் என்ற தகவலும் புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது .
கே ஜி எஃப் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் முடிந்து அடுத்த கட்ட தகவல்கள் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.