January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஷாலுக்கு ‘எனிமி’யான ஆர்யா

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஷால் மற்றும் ஆரியா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர் .

இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யா சம்மதம் தெரிவிக்கவே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அக்டோபர் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் படபூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

படப்பிடிப்பு பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நண்பர்களாக சுற்றித்திரியும் இருவரும் வழக்கத்துக்கு மாறாக முதல் முறையாக எதிரியாக மாறியுள்ளனர்.

‘எனிமி’ என பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளார்.

இதனை ஆர்யா தனது டுவீட்டர் பக்கத்தில் “யூ ஆர் மை எனிமிடா” என பதிவுசெய்துள்ளார். இதனை ஆர்யா மற்றும் விஷால் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 

மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ் வினோத்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

வெள்ளை யானை ,லென்ஸ்  மற்றும் திட்டம் 2 ஆகிய படங்களை தொடர்ந்து இந்நிறுவனம் தயாரிக்கும் நான்காவது தமிழ் படம் இதுவாகும்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ,லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு பிருந்தா மாஸ்டரின் கோரியோகிராபியில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

 

இந்த படத்தில் டிக்டாக் புகழ்  நடிகை மிருணாளினி ரவி நடிக்கிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஆர்யா கலந்து கொள்ளலாம் என படக்குழுவுவினர் தெரிவித்துள்னர்.

மேலும் விஷால் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் சக்ரா. இந்த படத்தை எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ளார். இதன்பிறகு துப்பறிவாளன் 2 திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.