January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாத்தி கம்மிங் பாடல் படைத்த புதிய சாதனை

தீபாவளியை முன்னிட்டு வெளியாகிய மாஸ்டர் பட டீசர் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் யூடியூப் போன்ற பல சமூக வலைத்தளங்களில் இந்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான வாத்தி கம்மிங் பாடல் யூடியூப், டிக் டாக் என்று பல தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

லிரிக்ஸ் குறைவாகவும் மியூசிக் அதிகமாகவும் உள்ள இந்தப் பாடல் மொழிகளை கடந்து பலரிடம் பிரபலமாகி இருக்கிறது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 90 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதனை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

மாஸ்டர் பட டீசர் 39 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளைப் பெற்று தென்னிந்தியாவின் முதல் டீசர் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

இந்திலையில் பிரபல பாடலான வாத்தி கம்மிங் பாடலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.மாளவிகா மோகனன் , கௌரி கிஷன், ரம்யா ,சாந்தனு, நாகேந்திர பிரசாத், சஞ்ஜிவ், ஸ்ரீமன் , உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் திகதி நடைபெற்றது. செவன் ஸ்கிரின் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீடு கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப் போயுள்ளது.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.