January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலா பற்றிய திரைப்படம்; புதிய தகவலை வெளியிட்டார் இயக்குனர் ராம்கோபால் வர்மா

சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து சர்ச்சை இயக்குனர் எனப் பெயர் எடுத்த தெலுங்கு இயக்குனரான ராம்கோபால் வர்மா ஏற்கெனவே சசிகலா பற்றிய படம் ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.தற்போது இந்த படம் பற்றிய புது தகவல் ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார் .

“நீங்கள் நெருக்கமாக இருக்கும் போது ஒருவரை கொலை செய்வது எளிது” – தொன்மைத் தமிழ்ப் பழமொழி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் .

 

இப்படம் S என்ற பெண்ணும் E என்ற ஆணும் ஒரு தலைவருக்கு செய்தது பற்றியது எனக் குறிப்பிட்டிருக்கிறார் .

தமிழ்நாடு தேர்தலுக்கு முன்பாக அந்த லீடரின் பயோபிக் வெளியாகும் அதே நாளில், இந்த சசிகலா படமும் வெளியாகும் என குறிப்பிட்டிருக்கிறார் .

லட்சுமியின் என்டிஆர் படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி என்பவர் சசிகலா படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்தப்படம் ஜெ.எஸ் மற்றும் இபிஎஸ் இடையேயான மிகவும் சிக்கலான மற்றும் சதி உறவை பற்றியதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு உண்மையான காரணங்களை தேடிக்கொண்டிருக்கும் சிலர் மத்தியில் ,தலைவி, சசிகலா போன்ற படங்கள் எந்தளவுக்கு உண்மையை சொல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தென்னிந்திய திரையுலகில் சமீப காலமாக பயோபிக் படங்கள் எடுப்பது வழக்கமாகி வருகிறது. தெலுங்கில் மகாநடி படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பிறகு பலருக்கும் பயோபிக் படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.