January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிறது வொண்டர் வுமன் 1984 திரைப்படம்

வொண்டர் வுமன் 1984 திரைப்படத்தின் பாகம் 2 ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

டிசி பிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இதனை வெளியிட்டிருக்கிறது.

காமிக்ஸ் கதாபாத்திரத்தை தழுவிய அதிரடியான மற்றும் சுவாரஸ்யமான த்ரில்லர் நிறைந்த கதைகளை கொண்டு உருவாக்கப்பட்ட வொண்டர் வுமன் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது.

PATTY JENKINS இயக்கத்தில் வொண்டர் வுமனாக வலம் வரும் GAL GADOT சூப்பர் ஹீரோயின் நடிப்பில் அதிரடி காட்டும் இந்தப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.