ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கங்கனா ரணாவத். தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதற்காக பல தியாகங்களை செய்துள்ளதாக கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தலைவி திரைப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக கங்கனா ரணாவத் குறிப்பிட்டிருக்கிறார். படத்தில் சிறப்பு வேடமான எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார் .
இதில் மிக முக்கியமாக தலைவி படத்துக்காக கங்கனா ரணாவத் தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக்கொண்டார் .அதுமட்டுமின்றி பரதநாட்டியம் கற்றுக் கொண்ட அவர் படப்பிடிப்பு தளத்தில் பரதநாட்டிய உடையுடன் எடுத்த சில புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் .
விஷ்ணுவர்தன் ,இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.வி விஜயேந்திரபிரசாத் கதை எழுதியிருக்கிறார்.
ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் தலைவி படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்தப்படத்தில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே தோற்றம் அளிப்பதற்காக கங்கனா ரணாவத்துக்கு ஸ்பெஷலான மேக்கப் போடப்படுவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர்தான் கங்கனாவின் தலைவி தோற்றத்திற்காக இந்தப்படத்தில் பணியாற்றுகிறார். இந்தியத் திரையில் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக தான் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் சிறியதாகவும் அதேசமயம் வலிமையுடன் இருக்கும் எனது அரிய உடல் அமைப்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
30 வயதுக்குப் பிறகும் தலைவி படத்துக்காக தான் 20 கிலோ உடல் எடையை அதிகரிக்க வேண்டி இருந்ததாகவும் அதேவேளை பரதநாட்டியம் ஆட வேண்டி இருந்ததாலும் தனது முதுகில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார் .
இந்நிலையில் தலைவி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள கங்கனா ரணாவத் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .
தமிழகத்தின் அரசியல் ஆளுமை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி எப்போது வெளியாகும் என பிரபலங்களும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
It’s never easy to say bye but time to say bye to my mountains, leaving for last schedule of Thalaivi to Hyderabad, post that cos of back to back filming commitments might not be back in Manali anytime soon but thank you Himalayas for giving me shelter in testing times ❤️ pic.twitter.com/KNGKh8QmWB
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) November 19, 2020