இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் மூன்று முகங்களை உள்ளடக்கியவாறு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சமந்தாவின் கதீஜா என்ற பெயருடன் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில், ரஞ்சன்குடி அன்பரசு, முருகேச பூபதி ஒஹூந்திரன்’ என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும், இந்த பெயர் சுருக்கமாக ‘ரேம்போ’ என அழைக்கப்படுவதாகவும் அவரின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளதுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இதனால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என சமந்தாவின் புகைப்படத்துடன் வெளிவந்திருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முன்னதாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என பேசப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது அதிகாரபூர்வமாக திரையரங்குகளில் தான் படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த படம் குறித்த முன்னோட்டமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெய்லர் அல்லது டீசர் வெளிவந்தால் தான் கதையின் மையக் கரு என்ன என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்.