தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கடந்த 25 ஆம் திகதி முதல் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து தூர இடங்களில் இருந்து கொழும்புக்கான பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாளை முதல் கொழும்பில் ஊரடங்கு தளர்த்தப்படுவதால், பஸ் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே பஸ் சேவைகள் நடத்தப்படும் எனவும், இதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடான பயணத்தின் போது, பஸ்கள் அந்த பிரதேசங்களில் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.