May 17, 2025 12:25:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராகிறார் ஹர்பஜன் சிங்

Photo: Twitter/KKR

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், ஐ.பி.எல் அணியொன்றின் பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹர்பஜன் சிங், 2015ஆம் ஆண்டு முதல் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

எனினும், ஐ.பி.எல் போட்டியில் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடினார். தற்போது ஐ.பி.எல்.லில் விளையாடுவதில் இருந்தும் அவர் ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.

41 வயதான அவர், ஐ.பி.எல் அணியொன்றின் பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் எந்த அணியுடன் இணைந்துகொள்வார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

எனினும், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இரண்டு அணிகள் ஹர்பஜன் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல் தொடரில் மும்பை, சென்னை, கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர், மொத்தம் 163 போட்டியில் 150 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.