File Photo
பிரான்ஸில் ஒமிக்ரோனை போன்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஐஹெச்யு- பி.1.640.2 என அடையாளம் காணப்பட்டுள்ள இந்தப் புதிய வைரஸால் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸுக்கும், ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள வைரஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, லம்ப்டா மற்றும் ஒமிக்ரோன் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.
இந்நிலையில் இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் திரிபு உலக நாடுகள் பலவற்றில் பரவியுள்ளது.
இவ்வாறான நிலைமையில் பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள வைரஸும் மற்றைய நாடுகளிலும் பரவலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ், ஒமிக்ரோனை விட அதிக நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.