November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக்; பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 3 பதக்கத்தையும் வென்றது ஜமைக்கா!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (31) இடம்பெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனைகள் முதல் மூன்று இடங்களையும் பெற்று 3 பதக்கங்களையும் வென்றனர்.

29 வயதான எலைன் தாம்சன்-ஹேரா (Elaine Thompson-Herah) போட்டி தூரத்தை 10.61 விநாடிகளில் ஓடி தங்க பதக்கத்தை சுவீகரித்தார்.

இதையடுத்து ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தய வரலாற்றில் அதி வேகமாக ஓடிய இரண்டாவது பெண் என்ற பெருமையையும் தனதாக்கி கொண்டுள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை வென்றுள்ளார்.

அத்தோடு, இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸூம் (Shelly-Ann Fraser-Pryce), மூன்றாவது இடத்தில் ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சனும் (Shericka Jackson) பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தய வரலாற்றில் ஆக வேகமாக ஓடி சாதனை படைத்தவர் அமெரிக்காவின் புளோரன்ஸ் கிரிஃபித்-ஜாய்னர் ( Florence Griffith-Joyner) ஆவார்.

இவர் போட்டி தூரத்தை 10.49 விநாடிகளில் ஓடி முடித்தார். கடந்த 33 ஆண்டுகளாக அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.