
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய அங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆசிரியர்களும் , மாணவர்களும் இராணுவத்தினரால் விசேட பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய சுமார் 10,500 பேர் வரையிலானோர் நுற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலைமையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்பதனால் முன் ஆயத்தமாக வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியையும் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.