2022 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கும் மற்றும் இரண்டு மனித உரிமைகள் அமைப்பிற்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு தேர்வுக் குழுவினால் இன்று அறிவிக்கப்பட்டது.
ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட யுக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக அந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the 2022 #NobelPeacePrize to human rights advocate Ales Bialiatski from Belarus, the Russian human rights organisation Memorial and the Ukrainian human rights organisation Center for Civil Liberties. #NobelPrize pic.twitter.com/9YBdkJpDLU— The Nobel Prize (@NobelPrize) October 7, 2022